இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 350 ஐக் கடந்துவிட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.9.22 இலட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த ஹுருன் நிறுவனத்தின் இந்தியா கிளை சார்பில், 2026-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் பட்டியலில்
கடந்த 10 வருடமாக அம்பானி, அதானிக்கு மத்தியில் பெரும் போட்டி இருந்து வரும் வேளையில், இந்த வருடம் கௌதம் அதானி 9.23 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் M3M ஹூரன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் 2026ல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8.63 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் ரூ.3.39 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
சைரஸ் எஸ். பூனாவாலா, ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, குமார் மங்கலம் பிர்லா, திலீப் ஷாங்வி, அசிம் பிரேம்ஜி, அனில் அகர்வால் மற்றும் சமீர் மேத்தா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும் இருந்த நிலையில், இந்த ஆண்டு அதானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |