மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள்
இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன என்று உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - விஜயராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகிறார்.
மகிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை சந்தித்திருந்தார்.
இவ்வாறு முக்கிய இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகரும் மகிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
