விண்வெளியில் கீரைகளை வளர்த்து அதை சமைத்து நாசா சாதனை!
நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாக தயாரித்த காணொளியை பகிர்ந்துள்ளது.
இந்தக் காய்கறிகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக விண்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பில் வளர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெரியவருகையில்,
Veggie தாவர வளர்ப்பு
எதிர்காலத்தில் நீண்டகால விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவை அங்கேயே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாகத் தயாரித்துள்ளார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது விண்வெளியில் நிலவும் நுண் ஈர்ப்பு சூழலில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதையும், எதிர்கால நீண்டகால விண்வெளிப் பயணங்களுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் ஆராய்வதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.
மேனன், இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட கீரைகளை அறுவடை செய்து சமைத்ததாகவும், தாங்கள் தயாரித்த உணவுகளில் இதுவே சிறந்ததாக உணவு என்றும் அவர் பகிர்ந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாவரங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்கிய நாசாவின் Veggie குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Chez ISS - Cooking on @Space_Station with @Astro_Jessica and Anil
— Anil Menon (@astro_anil) August 17, 2026
On this episode we give you farm to table, simple, and delicious. This Kale and Wasabi Mustard was grown on ISS over one month. We harvested several leaves and put them to the test. It might be the best meal we… pic.twitter.com/Oq9narSiu9
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |