சிறைச்சாலை அதிகாரியை தாக்கிய இந்திய சிறைக்கைதி
பூஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரியை தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று(03) இரவு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க கூறுகையில், அமன் ஷேக் என்ற கைதி சிறைக்கைதியினால் தாக்குதலுக்குள்ளான அதிகாரி சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும், அந்த அமன் ஷேக் என்ற இந்திய சிறைக்கைதி பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள விசேட அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான அதிகாரி மேலதிக சிகிச்சைக்காக காராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறைக்கைதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |