இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி: தலைமை பொறுப்பிலிருந்து விலகும் ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக்கிண்ண தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடனான இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது.
இந்திய அணியுடனான போட்டியில் வென்று 6வது முறையாக அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வென்றது.
புதிய தலைமை பயிற்சியாளர்
உலகக்கிண்ண போட்டிகளில் இம்முறை நடைபெற்ற போட்டிகளில் தோல்வியே கண்டிருக்காத இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வியுற்றது இந்திய ரசிகர்களையும் வீரர்களையும் கவலையுற வைத்தது.
இந்நிலையில் உலககோப்பையின் போது இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்காக வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலமும் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் ராகுல் டிராவிட் அதை நீட்டித்து தொடர விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராகுல் டிராவிட் பதவியை தொடர முடியாவிடின் அந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |