யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்
Jaffna
Sri Lanka
India
By Kiruththikan
சுதந்திர தினம்
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்