விமானப்படையின் ஜெட் விமானங்கள் : பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களிலும் நிலையான ஆய்வு நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு (Defence Ministry Sri Lanka) தெரிவித்துள்ளது.
வாரியபொலவில் (Wariyapola) கடந்த வெள்ளிக்கிழமை (21) K-8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ரக ஜெட் விமானங்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
விமான விபத்து
அத்துடன் தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை விமான விபத்து குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாரியபொல, மேல் மினுவங்கேட்டின் வெலகெதர பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்