கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (07) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரிக்க அனுமதித்து குறி்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால தடை உத்தரவு
அதன்படி, இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே ஐந்தாம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, மனுதாரர் ஏதேனும் ஆட்சேபனைகளை மே ஏழாம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
இதன்பின்பு, மனு மீதான விசாரணை வரும் மே 16 ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த திகதி வரை இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தொடர்புடைய வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள் எடுத்த முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
