வெளியானது சென்னையின் உத்தேச அணி விபரம் - தலைவர் இடத்திற்கு ஸ்டோக்ஸ்
இந்தியாவின் முதல்தார விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடரின் 16வது போட்டிதொடர் வரும் 2023ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்ற முடிந்துள்ளது.
அந்த ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை முழுமைப்படுத்தியுள்ள 10 அணிகளுக்கு மத்தியில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக செயல்பட்டது.
பென் ஸ்டோக்ஸை
குறிப்பாக விரைவில் தோனி ஓய்வு பெறும் நிலையில் தலைவர் இடத்திற்கு அனுபவம் வாய்ந்த உலகின் முதல்நிலை சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி என்ற விலைக்கு வாங்கிய அந்த அணி நிர்வாகம் ஏற்கனவே ஓய்வு பெற்ற ட்வயன் ப்ராவோ இடத்தையும் பூர்த்தி செய்துள்ளது.
மேலும் நியூசிலாந்தின் கெய்ல் ஜமிசனை வெறும் 1 கோடிக்கு வாங்கியதும் சிறந்த முடிவாகும் என விளையாட்டு ஆர்வலர்களால் கூறப்படுகிறது.
சென்னையின் உத்தேச அணி வீரர்களாக ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹார், சிமர்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி மகீஷ் தீக்ஷனா ஆகியோர் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
