நெருப்புக்கு எதிராக நெருப்பு! இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் 92-வது அலை தாக்குதல்
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது புதிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டஅறிக்கையின்படி, நாள் முழுவதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ரேடார் அமைப்புகள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலின் பிரதான இராணுவ விமானத் தளம் ஆகியவற்றின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல், ஐ.ஆர்.ஜி.சி-யின் கடற்படை மற்றும் விமானப்படைகள், "ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4"-இன் 92-வது அலையை நடத்தி, பிராந்தியத்தில் (ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன்) மற்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கப் படைகளின் ரேடார் அமைப்புகள் மற்றும் கடற்படை உபகரணங்கள் மீது விரைவான தாக்குதல்களை நடத்தியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட அமெரிக்க கப்பல்
கடற்படை நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள அல்-ஷுயூக் துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க நீர்நிலத் தாக்குதல் கப்பல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மற்றும் இரவு முழுவதும் தொடர்ந்த தாக்குதல்களின் தொடர்ச்சியாக, ஹைஃபாவின் தென்கிழக்கில் அமைந்துள்ளதும், இஸ்ரேலிய F-16 போர் விமானப் படைப்பிரிவுகளைக் கொண்டதுமான ரமத் டேவிட் விமானத் தளத்தின் மீது விமானப்படை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியதாக ஐ.ஆர்.ஜி.சி. மேலும் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் மற்றொரு கட்டத்தில், "நெருப்புக்கு எதிராக நெருப்பு" என்ற தந்திரத்தைத் தொடரும் விதமாக, ஐ.ஆர்.ஜி.சி படையானது "குர்ரம்ஷஹர்-4" என்ற பல்முனைப் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, மத்திய டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்