பேச்சில் மீண்டும் தடங்கல் : செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைவிட மறுக்கும் ஈரான்
மத்திய கிழக்கு போர் பதற்றத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை கைவிட ஈரான் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதிலும் அந்த செய்தியை ஈரான் நிராகரித்துள்ளது.
தெஹ்ரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று ஒரு மூத்த ஈரானிய வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.
அணுசக்திப் பிரச்சினை இடம்பெறவில்லை
அமெரிக்காவுடனான பூர்வாங்க ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்திப் பிரச்சினை இடம்பெறவில்லை என்றும் அந்த வட்டாரம் கூறியது.

"இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் அணுசக்திப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும், எனவே அது தற்போதைய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை.
ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை நாட்டிலிருந்து வெளியே அனுப்புவது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை," என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |