போரின் முடிவு தொடர்பில் ஈரான் வெளியிட்டுள்ள தகவல்
நடந்து வரும் போருக்கு முழுமையான முடிவு கொண்டுவரும் எந்த முயற்சியையும் ஈரான் வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் ஈரானின் மீது திணிக்கப்பட்டது என்றும், போரை முழுமையாக நிறுத்தும் வகையில் முன்வைக்கப்படும் எந்த முன்மொழிவையும் கேட்டு பரிசீலிக்கத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
முழுமையான தீர்வு
ஆனால், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர சில நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்த தயாராக இல்லை என தெரிகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஈரான் வெறும் தற்காலிக போர்நிறுத்தத்தை நாடவில்லை என்றும், முழுமையான, விரிவான மற்றும் நீடித்த தீர்வை மட்டுமே விரும்புகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

அதன்போது, அவர் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் இருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |