இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உள்நுழையும் ஈரான்: விடுக்கப்பட்ட பகிரங்க மிரட்டல்
கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையை ஈரானின் புரட்சிகர காவலர்களின் Brigadier General Mohammad Reza Naqd தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காசாவில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் மத்தியதரைக் கடல் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு
ஆனால், மத்தியதரைக் கடலுக்கு ஈரானுக்கு நேரடி அணுகல் இல்லை, மத்தியதரைக் கடல் வழியை ஈரான் எவ்வாறு மூடும் என்பது தெளிவாக கூறமுடியாது.
மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானிய ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவில் உள்ள கூட்டணி மட்டுமே காணப்படுகிறது.
அமெரிக்காவே காரணம்
அத்தோடு, காசாவில் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
மேலும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவே காரணம் என்றும் ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |