வெள்ளப்பெருக்கை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை உத்தியோகபூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக நீர்ப்பாசனத்துறை இயக்குநர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார்.
இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி ஆறுகளின் நீர்மட்டங்களின் அளவுகளை தெரிந்துகொள்ள முடியும் எனவும், அதன் வாயிலாக வெள்ளப்பெருக்கு அபாயமுள்ள ஆறுகளை இனம்காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதன் வாயிலாக வெள்ளப்பெருக்கின் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை தீர்க்க முடிவது மாத்திரமல்லாமல், நீர் மட்ட குறைவினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் தடுக்க முடியும் என நீர்ப்பாசனத்துறை அறிவித்துள்ளது.
ஏனைய விபரங்கள்
தொலைபேசி செயலியின் ஊடாகவும் இந்த இணையத்தளத்தை அணுக முடியும் என்று கூறப்படுகிறது.
rivernet.lk என்ற இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் தேவையான ஆறுகளின் நீர் மட்ட அளவுகளை தெரிந்து கொள்ள முடியும் என இயக்குநர் தெரிவித்தார்.
இதனை பொதுமக்களும் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்த இணையத்தளத்தில் களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர் மட்டங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன ஏனையவற்றின் விபரங்கள் விரைவில் பதிவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
