இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்
உக்ரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பாதி பேர் புகைப்பட பத்திரிகையாளர்களாக பணிபுரிந்தவர்கள் எனவும் தாக்குதலை ஆவணப்படுத்த முயன்ற போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த ஊடகவியலாளர்களில் 11 பேர் பாலஸ்தீனர்கள் என தெரிய வந்துள்ளது.
ஒரு லெபனான் ஊடகவியலாளரும்,மூன்று இஸ்ரேல் ஊடகவியலாளர்களும், தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஊடகவியலாளர்கள்
இப்ராஹிம் முகமது லாஃபி, முகமது ஜார்கூன், முகமது அல்-சால்ஹி, யானிவ் சோஹர், அய்லெட் அர்னின், ஷாய் ரெகேவ், அசாத் ஷாம்லாக், ஹிஷாம் அல்ன்வாஜா ,முகமது சோப் ,சயீத் அல்-தவீல், முகமது ஃபயஸ் அபு மாதர் ,அகமது ஷெஹாப், இஸ்ஸாம் அப்துல்லா ,ஹுஸாம் முபாரக், சலாம் மேமா என்ற 15 ஊடகவியலாளர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்களும் அதிகளவில் பாதிப்படைவதாகவும் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.