காசா மக்களுக்காக முன்வரும் ஸ்கொட்லாந்து
இஸ்ரேல் தரைவழிப் போர் காரணமாக வெளியேறி வரும் காசா மக்களுக்கு அடைக்களம் வழங்குவதற்கு ஸ்கொட்லாந்து தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா, உக்ரைன் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களை ஸ்காட்லாந்து வரவேற்றுள்ள நிலையில் இப்போது அதன் தொடர்ச்சியாக காசா மக்களையும் ஏற்றுக்கொள்வதற்கு ஸ்கொட்லாந்து தாயாராக இருக்கிறது.
தொடர்ந்து 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடைய நடைபெற்று வரும் போர் காரணமாக இருதரப்பிலிருந்தும் 3500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஸ்கொட்லாந்து முதல் அமைச்சர் கூறுகையில், காசா தாக்குதலில் பலியானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முதல் நாடாக ஸ்கொட்லாந்து இருக்கும் என்றும் காசாவில் இடம்பெயர்ந்த ஒரு மில்லியன் மக்களுக்காக சர்வதேச அகதிகள் திட்டத்தை தொடங்க சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், காசாவில் காயமடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிக்கல்களை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இங்கிலாந்து அரசையும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.