நிவாரண பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ் : இஸ்ரேல் வெளியிட்டுள்ள காணொளி
காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஹமாஸ் அமைப்பினர் திருடும் காணொளிக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிக போர் நிறுத்தம்
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் ஆரம்பித்து இரு தரப்பினரும் சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு வந்தனர்.
Hamas members beat civilians and steal the humanitarian aid they received from international organizations—facilitated by Israel.
— Israel Defense Forces (@IDF) December 9, 2023
Hamas puts its terrorist goals over Gazans' needs. pic.twitter.com/lFuaWU0bdx
இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கி உள்ளது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |