லெபனானில் கடைசி பாலத்தையும் தகர்த்தது இஸ்ரேல்
தெற்கு லெபனானை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் கடைசிப் பாலத்தையும் இஸ்ரேலியத் தாக்குதல் துண்டித்துவிட்டதாக லெபனானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
டைர் பகுதியை சிடோனுடன் இணைக்கும் காஸ்மியே பாலம், அடுத்தடுத்து நடந்த இரண்டு தாக்குதல்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஹிஸ்புல்லாவின் விநியோகங்களை தடுக்க பாலங்கள் தகர்ப்பு
லெபனானின் அரசு உள்கட்டமைப்பை ஹிஸ்புல்லா பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, தங்கள் படைகள் அந்நாட்டில் உள்ள பாலங்களைத் தாக்குவதாக இஸ்ரேல் முன்னதாகக் கூறியிருந்தது.

இதேவேளை லிட்டானி நதிக்குச் சற்று வடக்கே அமைந்துள்ள, சுமார் 40,000 மக்கள்தொகை கொண்ட நகரமான நபாத்தியேவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து புகை எழுவது காணப்பட்டது.
தெற்கு லெபனானை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் கடைசியாக எஞ்சியிருந்த பாலத்தையும் துண்டித்த ஒரு தாக்குதலுக்குப் பிறகு, கடற்கரைக்கு அருகிலுள்ள காஸ்மியேவில் ஏற்பட்ட சேதங்களை மக்கள் ஆய்வு செய்வதாக ஒரு மூத்த லெபனான் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
images credit -reuters
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

