இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த அந்த விடயம்: எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்கா
தெற்கு எல்லை நகரமான ராபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தெளிவாக திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காசா பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் முறையான திட்டமிடல்கள் இன்றி போர் நடவடிக்கைகளை விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இஸ்ரேலின் முடிவு
இந்நிலையிலேயே, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் பெருமளவிலான மக்கள் ராபாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த போர் நடவடிக்கை விரிவாக்கம் என்ற முடிவுக்கு பன்னாட்டு அமைப்புகள் எச்சரித்துவருகின்றன.
எதிர்கால நடவடிக்கைகள்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஹமாஸின் பிடியில் உள்ள ராபாவில் எதிர்கால நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாகத் திட்டமிட்டுள்ளோம்.
கான் யூனிஸில் மருத்துவமனை தாக்குதலில் 70 ஹமாஸ் வீரர்களைக் கைது செய்ததாகவும் அவர்களில் 20 பேர் நேரடியாக ஒக் 07 தாக்குதலோடு தொடர்புடையவர்கள் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |