ராக்கெட்டுகளை பாதுகாக்கும் உலோகம்! இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு
உந்துகணைகள் (Rockets) அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்க புதிய உலோக வகையொன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இஸ்ரோவின் திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய விஞ்ஞானிகள் இந்த உலோகத்தை கண்டு பிடித்துள்ளனர்.
இதன்படி, உந்துகணை என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்- கார்பன் (Carbon-Carbon (C-C)) எனப்படும் அதிநவீன உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைந்த எடை
இது தொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், “இது கலவைகள் போன்ற மேம்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இது குறைந்த எடையை கொண்டதுடன், அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி படைத்தது.
அத்துடன் உந்துகணையின் செயல் திறனை மேம்படுத்தும். இதனால் உந்துகணையின் எடை குறைவதால் அதிக எடை கொண்ட செயற்கை கோள்கள் மற்றும் கருவிகளை உந்துகணையில் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும்.
அத்துடன், உந்துகணையில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் உள்ளிட்ட கருவிகளின் திறனை இந்த உலோகம் அதிகரிக்கிறது.
புதிய உலோகம்
அதிக வெப்பநிலையிலும் உந்துகணையின் இயந்திரங்களை இந்த உலோகம் பாதுகாக்கிறது. இவை உந்துகணையின் என்ஜின் தொழில்நுட்பத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.
அத்துடன், இந்த உலோகம் உந்துகணைகளின் என்ஜின்களின் மதிப்பை மேம்படுத்துவதுடன், உந்துதல் நிலைகளையும் அதிகரிக்கிறது“ என தெரிவித்துள்ளனர்.
With the creation of a lightweight Carbon-Carbon (C-C) nozzle for rocket engines, #ISRO has made significant advancements in the field of rocket engine technology.
— ISRO InSight (@ISROSight) April 16, 2024
This breakthrough from the Vikram Sarabhai Space Centre (VSSC) is expected to improve critical rocket engine… pic.twitter.com/EuyxtI1vOk
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |