EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்

Sri Lankan Tamils M A Sumanthiran Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Independent Writer Aug 31, 2026 01:19 AM GMT
Report

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் தாய்மார்களும் ஏனையவர்களும் வீதியில் நின்று நெஞ்சம் வெடிக்கக் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் நீதி கேட்கும்போது, "இந்த மாநாட்டிற்கும் போராட்டத்திற்கும் தமிழரசுக்கட்சி பங்கேற்காது, ஆதரவும் இல்லை" என்று மிகச் சாதாரணமாக அறிக்கையை விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டது இந்தச் சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சி.

அடுத்ததற்கெல்லாம் நாங்கள் தமிழ் மக்களினுடைய ஏகப்பிரதிநிதிகள். வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்கள் மக்கள் அதிக அளவில் வாக்களித்தது எங்களுக்குத்தான். எங்களுக்குத்தான் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நாங்கள்தான் தமிழ்த்தேசியவாதிகள். எங்களிடம்தான் தமிழ்த்தேசியம் இருக்கிறது. நாங்கள்தான் தமிழ்த்தேசியத்தைக் கட்டிக்காக்கிறோம். இப்படி அடிக்கடி முழங்கிக் கொள்கின்றவர்கள் நேற்று அரசியல் குழு கூட்டத்தை நிகழ்நிலை (Zoom) இல் நடத்தியிருக்கிறார்கள்.

ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல்

ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல்

ஶ்ரீநேசன் எம்.பி கேள்வி

"இந்த மாநாட்டிற்கு ஏன் போகக் கூடாது?" என ஶ்ரீநேசன் எம்.பி கேள்வி எழுப்பியபோது, "எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று சாக்குப்போக்குச் சொல்லியிருக்கிறார் சுமந்திரன். அதற்கு மட்டக்களப்பு முன்னாள் உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், "நாங்கள் ஸ்ரீதர் தியேட்டர் வாசலில் போய் நின்றால் எங்களை வாருங்கள் என்று அழைப்பு விடுப்பார்களா ?" என்று கேட்க பதிலளிக்க வழியின்றி zoom மீட்டிங்கை விட்டே சுமந்திரன் நழுவி ஓடியிருக்கிறார்.

அழைப்பு வரவில்லை என்ற இவர்களின் அப்பட்டமான பொய்யை, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியிடம் நாம் கேட்டபோது சுமந்திரனின் வீடு தேடிச் சென்று, அவர் இல்லாததால் அவரின் மகளிடமே அழைப்புக் கடிதத்தைக் கையளித்ததாகச் சான்றுகளோடு கூறியுள்ளார். 

ஆனால், அந்த தாய்மார் கொடுத்த கடிதத்தில் 'தமிழரசு கட்சி' என்பதற்குப் பதிலாகப் பிழையாக 'தமிழரசு காட்சி' என்று எழுதப்பட்டிருந்ததாம் இதை வைத்துக் கொண்டு, தன்னை அவமதித்துவிட்டார்கள் என்று சுமந்திரன் தரப்பு புலம்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

சுமந்திரன் அவர்களே. வீதியில் நின்று போராடும் அந்தத் தாய்மார் ஒன்றும் பல்கலைக்கழகத்தில் ப (PhD) பட்டமோ, சட்டத்துறையில் பட்டமோ பெற்றுவிட்டு வீதிக்கு வரவில்லை! இந்த மண்ணிற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் பெற்ற பிள்ளைகளையும் உறவுகளையும் தொலைத்துவிட்டு, முதுமையிலும் தள்ளாத வயதிலும் கண்ணீரோடு நீதிக்காக அலைபவர்கள்.

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் தாயைப் போன்றவர்கள். அவர்களது எழுத்துப் பிழையை ஆராய்ந்து அரசியல் செய்யும் உங்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருக்கிறதா?

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

கண்ணீரும் நியாயமான போராட்டமும்

சிங்களச் சமூகத்திற்கோ கொழும்பு மேல்தட்டு வர்க்கத்திற்கோ ஒரு பிரச்சனை என்றால் மூக்கு வியர்க்க ஓடிப்போய் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் தெரிந்த இவர்களுக்கு, சொந்த இன தாய்மார்களின் கண்ணீரும் நியாயமான போராட்டமும் மட்டும் கசக்கிறதோ? 

தான் வாதாடிய வழக்கறிஞர் தொழில் பட்டியலைச் சமூக ஊடகங்களில் தன் விசிறிகளை வைத்துப் பரப்பி, தன்னை ஒரு 'சட்டரீதியான கிங் மேக்கர்' என்றும், தமிழினத்தின் மீட்பர் என்றும் போஜிக்க வைக்கும் சுமந்திரனிடம் கேட்கிறோம்:

  • தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கோ, அரசியல் கைதிகளின் விடுதலைக்கோ, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கோ சட்டரீதியாக நீர் பெற்றுத் தந்த ஒரு துளி தீர்வுதான் என்ன?
  • நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கித் தொழில் தர்மத்தின் பெயரால் வாதாடியதை, தமிழ்த் தேசியத்திற்கான வரலாற்றுச் சாதனையாகக் காட்டி எத்தனை காலம்தான் இந்த மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
  • தமிழ் மக்களின் இரத்தத்தில் கறைபடிந்த அப்பட்டமான தமிழர் விரோத சக்தியான ஈபிடிபி (EPDP) உடனெல்லாம் ஸ்ரீதர் தியேட்டர் வாசலில் கை குலுக்கி, அரசியல் பங்காளிகளாக நின்று பேரம் பேசத் தெரிந்த உங்களுக்கு, சொந்த மக்கள் வீதியில் நின்று போராடும்போது மட்டும் "கட்சி கலந்து கொள்ளாது" என்று புறக்கணித்து ஓட எப்படி மனம் வருகிறது?

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற ஈபிடிபியின் அரசியல் பங்காளிகளாக மாறியுள்ள சுமந்திரன் தரப்பால் ஒருபோதும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதும், தமிழர்களின் உரிமைக்கான உண்மையான குரலாக நிற்க முடியாது என்பதும் எப்போதோ தெரிந்த உண்மை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு?

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு?

தமிழர் விரோதப் போக்கு

இதனால்தான் இன்றைய காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டைக் கண்டு தமிழர் தேசத்தின் திரட்சியைக்கண்டு அஞ்சியபடி இவர்கள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.

மக்களின் உண்மையான வலிகளைப் புறக்கணித்துவிட்டு, தமிழர் விரோத சக்திகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தங்களைத் 'தமிழ்த் தேசியத்தின் உயிர்மூச்சு' என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொள்ளும் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கில் பயணிக்கும் இந்தச் சுமந்திரன் தரப்பிற்கு, இந்த மண்ணில் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கு எந்தவொரு தகுதியும் அருகதையும் எள்ளளவும் கிடையாது எனப் பலரும் ஆங்காங்கே அங்கலாய்த்துக்கொள்கிறார்களாம்.

சில வேளைகளில் இன்றைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய அந்த மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவர்களுக்கு எதிராக கட்சியினுடைய முடிவை மீறியதாக சில வேளைகளில் கடிதம் கூட அனுப்பலாம். 

அப்படி இந்த சுமந்திரன் என்று கையப்பம் இட்டு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினால் ஈழத்து தமிழ் மக்களே நீங்களே தீர்மானியுங்கள். தமிழ் தேசிய அரசியலில் இவர்கள் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை.

தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026