காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு

Missing Persons Sri Lankan Tamils Sri Lanka ITAK
By Independent Writer Aug 29, 2026 10:49 AM GMT
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பும் அழைப்பு விடுக்கவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று (28) வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கட்சி சார்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்

லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்

பிரிந்து நின்று போட்டியாகச் செயல்பட வேண்டாம்

அந்த கடிதத்தில், ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு | Itak Not Invited To The Missing Persons Conference

இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ள தடையில்லை என்றாலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா

நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026