காணாமல் போன யாழ். கடற்றொழிலாளரின் சடலம் நாகபட்டினத்தில் மீட்பு!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்றையதினம் (19) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தார்.
தேடுதல் நடவடிக்கை
இதனையடுத்து காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்றையதினம் அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய விசாரணைகளின் பின்னர் அவரது உடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |