புதிய பயங்கரவாத சட்டம் வேண்டாம்: அநுர அரசுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Jaffna Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Protest
By Theepan Oct 09, 2026 09:17 AM GMT
Report

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனுர அரசே புதிய பயங்கரவாத சட்டமும் வேண்டாம் பழைய பயங்கர வாதச் சட்டமும் வேண்டாம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அனுப்பும் மஜகர் வாசிக்கப்பட்டது.

சட்டவிரோத செயற்பாடு! நீதிச்சேவையில் முற்றாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே

சட்டவிரோத செயற்பாடு! நீதிச்சேவையில் முற்றாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே

உறவுகளை இன்றுவரை தேடுகிறோம்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சார்ந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களான நாங்கள்,  பயங்கரவாதச் சட்டத்தினால் துன்புறுத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகின மக்களான நாங்கள், போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் நாங்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளை இதுவரை தேடிக்கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரே குரலில் "பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” வேண்டாம் எனக் கோருகிறோம்.

புதிய பயங்கரவாத சட்டம் வேண்டாம்: அநுர அரசுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Jaffna Protest Anurakumara Government

இந்தச் சட்டத்துக்கமைய,சரத்து 19 - காவல்துறையினுருக்கு உள்ள அதிகாரம் போல இராணுவத்துக்கும் கடலோர காவல் படைக்கும் சந்தேக நபரை கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சரத்து 20 - காவல்துறை மாத்திரமன்றி இராணுவமும் கடலோர காவல் படையும் வீடுகளுக்கு சென்று சோதனையிட, தெருவில் செல்கையில் தடுத்து சோதனையிட, விசாரணை செய்ய அதிகாரமுண்டு, பிடியாணை இல்லாமல் கைது செய்ய முடியும்

சரத்து 27 - சந்தேநபரை இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க முடியும்

சரத்து 38 - தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை நீதவான் அனுமதியுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று விசாரணைசெய்ய, வேறு இடத்துக்கு கொண்டுசென்று விசாரணை செய்ய பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

சரத்து 51 - இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நடக்க உள்ளதாக காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தால், ஆபத்து நடைபெறும் என காவல்துறை அதிகாரி கருதினால், அவர்கள் பொதுமக்களை பாதுகாப்பதற்காக நீதவான் அனுமதி பெற்று ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் திரள்வதை, குறிப்பிட்ட கூட்டத்தைக் கூடுவதை, அல்லது ஊர்வலம் செல்வதை தடுக்க முடியும்.

ஒட்டுமொத்தத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவானது மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை முடக்கும் ஒன்றாக உள்ளது.

ஏனெனில் காவல்துறை அதிகாரி, இராணுவம், கடலோர காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஒரு விடயத்தை பயங்கரவாதம் என்று நம்பினால் அவர்கள் மக்கள் கூட்டம் கூடுவதையும் உரிமைக்காகக் குரல்கொடுப்பதையும் தடுக்க முடியும். அவர்களை கைதுசெய்ய முடியும்.

பாதுகாப்பற்ற வாழ்வு

48 மணித்தியாலங்கள் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாமல் தடுத்து வைத்து விசாரிக்க முடியும். இதற்கிடையில், சித்திரவதைகள், கடத்தல்கள், காணாமலாக்கப்படல், படுகொலைகள் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த வன்முறைகளைத்தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் பல வருடங்களாக அனுபவித்தோம். பாதுகாப்பற்ற ஒரு வாழ்வை வாழ்ந்தோம்.

கைதுகள், சிறைப்படுத்தல், சித்திரவைகள், துஷ்பிரயோகங்கள் இழைக்கப்பட்டன. இன்றும், கூட்டம் கூடப்போனால், சமூக வேலை ஒன்றை முன்னெடுத்தால் விசாரணைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அழைப்பாணை வருகிறது. புலனாய்வுத்துறையினர் விசாரணை என வீடுகளுக்கே வருகின்றனர்.

ஆகவே, மனித குலத்துக்கு ஆபத்தானதும் ஜனநாயக விரோத குறித்த சட்டமூலத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை : ஆனந்த விஜேபால எச்சரிக்கை

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை : ஆனந்த விஜேபால எச்சரிக்கை

மெட்ரோ பேருந்து சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள தனியார் துறையினர்!

மெட்ரோ பேருந்து சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள தனியார் துறையினர்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025