யாழில் 570 மீற்றர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்: கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

Jaffna Sonnalum Kuttram
By Theepan Mar 25, 2026 08:55 AM GMT
Report

யாழில் முன்னெடுக்கப்பட்ட வீதி ஒன்றின் புனரமைப்பு தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  குறித்த விடயங்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வீதியினை புனரமைக்க கூடுதலான நாட்கள் சென்றதாகவும், ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் கடுமையான குற்றச்சாட்டுக்களை பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் முன் வைத்துள்ளார்.

சுண்டிகுளம் பகுதியில் யானைகளால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் கவலை தெரிவிப்பு

சுண்டிகுளம் பகுதியில் யானைகளால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் கவலை தெரிவிப்பு

43 வீதிகள் புனரமைப்பு.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான 43 வீதிகள் கடந்த வருடம் 2025ஆம் ஆண்டு பிரதேச செயலகம் ஊடாக நிதி விடுவிக்கப்பட்டு , பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் மாங்கொல்லை வீதியானது 570 மீற்றர் நீளமும் , 3.90 மீற்றர் அகலமும் கொண்ட வீதியாகும். அதன் புனரமைப்பு பணியினை ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் ஒருவர் வீதி புனரமைப்பு பணிகளுக்கான வேலையினை பெற்றிருந்திருந்தார்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

570 மீட்டர் நீள வீதியை புனரமைக்க 76 நாட்கள்

யாழில் 570 மீற்றர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்: கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு | Jaffna Reconstruct Road Seetha Accusation

குறித்த வீதியின் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் வேலையை ஆரம்பிக்காது காலம் தாழ்த்தி வந்த ஒப்பந்தக்காரரால் வீதியின் புனரமைப்பு பணிகளை முடித்து வீதியின் இரு மருங்கிலும் மண் இட்டு வேலையை கடந்த 13ஆம் திகதியே பூர்த்தி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் 570 மீற்றர் நீளமான வீதியினை புனரமைக்க ஒப்பந்தக்காரருக்கு 76 நாட்கள் தேவைப்பட்டுள்ளன” என்றார்.

இணைய வழி மோசடி! சிக்கிய வெளிநாட்டினர் குழு

இணைய வழி மோசடி! சிக்கிய வெளிநாட்டினர் குழு

வீதிபுனரமைப்பு தொடர்பில் குற்றச்சாட்டு

யாழில் 570 மீற்றர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்: கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு | Jaffna Reconstruct Road Seetha Accusation

மாங்கொல்லை வீதியின் நடுவில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்தினை இழுத்து கட்டியிருந்த கம்பி காணப்பட்டது.

வீதி புனரமைப்பின் போது அதனை அகற்றி, வீதியினை புனரமையுங்கள் என பிரதேச செயலகத்தினரிடமும் மின்சார சபையிடமும் அது தொடர்பில் கோரிக்கை வைத்தேன்.

ஆனால், அவர்கள் வீதியின் நடுவில் உள்ள கம்பியை தாங்கள் அகற்றுவது எனில் தமக்கு அதற்கான செலவீனங்களை தர வேண்டும் அதனை யார் தருவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்.

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை

யாழில் 570 மீற்றர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்: கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு | Jaffna Reconstruct Road Seetha Accusation

இது தொடர்பில் நான் பிரதேச செயலகத்திடம் மீண்டும் கம்பியை அகற்றி விட்டு பணியை தொடருமாறு கோரிய போது, என்னையே கடிதம் கொண்டு வருமாறு அலைக்கழித்தனர்.

பின்னர் ஒருவாறு அந்த கம்பி கழட்டப்பட்ட பின்னர் , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தேன்.

வீதியில் பயணித்தவர்களின் சிரமம் ஒரு கட்டத்தில் ஒப்பந்தக்காரர் வேலையை முடித்து தருகிறார் இல்லை. நீங்களே அவருடன் கதைத்து உங்கள் வீதி வேலையை முடியுங்கள் என எனக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்தனர்.

அவரிடம் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கதைத்த போது விரைவில் முடித்து தருவேன் என உறுதி அளித்து , வீதியில் கற்களை பரவி விட்டு ஆட்கள் வர மாட்டார்கள், அந்த வீதியில் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்ட கற்களுக்கால் சிரமத்துடன் பயணித்தனர்.

ஈரானிய தூதரின் கொழும்பு குரல்! U.S கடுகடு அனுரவை தாக்கும்!

ஈரானிய தூதரின் கொழும்பு குரல்! U.S கடுகடு அனுரவை தாக்கும்!

வீதியின் தரத்தில் திருப்தி இல்லை

யாழில் 570 மீற்றர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்: கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு | Jaffna Reconstruct Road Seetha Accusation

இதனையடுத்து தொடர் இழுபறிகளுக்கு மத்தியிலையே வீதி புனரமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து 76 நாட்கள் சென்ற பின்னரே 570 மீட்டர் நீளமான வீதியினை புனரமைத்து முடித்துள்ளனர்.

76 நாட்களாக புனரமைக்கப்பட்ட வீதியின் தரத்தில் கூட எமக்கு திருப்தி இல்லை.

எனவே பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் புனரமைப்பு பணிகளையும், அந்த வீதிகளின் தரத்தினையும் மீள் சோதனை செய்ய வேண்டும் என கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு குறித்த நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்!

மின்வெட்டு குறித்த நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026