யாழில் களையிழக்கும் பொங்கல் வியாபாரம்
யாழில் பொங்கல் வியாபாரங்கள் களையிழந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பொங்கல் பானை உற்பத்தியாளர்கள், உள்ளூர் உற்பத்தி விற்பனையாளர்கள், வாண வேடிக்கைகள், வெடி விற்பனையாளர்கள் இவ்வாறான நிலையை எதிர்கொள்கின்றனர்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, ஆகிய சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகிறது.
களையிழக்கும் வியாபாரம்
இது தொடர்பாக விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் வற் வரியும் அதிகரித்துள்ளது.
இதனால் நாமும் விற்பனைப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளோம். குறிப்பாக ஒரு கிலோ அரிசி வேகவைக்கும் மண்பானை ஒன்றின் விலை கடந்த 03 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் 500 ரூபாவாக இருந்தது.
இப்போது 2024 ஆண்டு 800 ரூபாவாக இருக்கின்றது. அதே போன்று ஏனைய பானைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 800 ரூபா முதல் 2000 ரூபா வரையில் பானைகள் விற்பனையாகின்றது. இது தவிர பழவகைகள் ,வெடிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |