தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும் : சிறீதரன் கோரிக்கை

Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lanka SL Protest Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 12, 2023 03:02 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

யாழ்.தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும், அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.தையிட்டியில் இன்று(12) இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்து விகாரைக்கு வழங்குவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல பேர் இங்கே திரண்டு  வந்து இந்த அளக்கின்ற விடயத்தை தடுத்திருக்கின்றார்கள்.

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும் : சிறீதரன் கோரிக்கை | Jaffna Thaiyitti Issue

யாழ்.தையிட்டியில் காணி அளவீட்டுப்பணிகள் தற்காலிக நிறுத்தம் (படங்கள்)

யாழ்.தையிட்டியில் காணி அளவீட்டுப்பணிகள் தற்காலிக நிறுத்தம் (படங்கள்)

மிக முக்கியமாக மக்கள் இங்கு திரண்டதாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள் வருகை தந்ததாலும் இந்த அளவீட்டு திட்டம் நிறுத்தப்பட்டதாக உணரப்படுகிறது, இருந்தாலும் கூட இதற்கான மாற்றீட்டு காணி அல்லது வேறு இடங்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள் தான்.

மக்களுடைய வேண்டுகோள்

இதில் மிக முக்கியமாக மக்களுடைய காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எந்தவித அனுமதியும் இல்லாமல் சாதாரண மக்களுக்கு மதில் கட்டுவதற்காக, அவர்களை போட்டு இவ்வளவு தூரம் படாத பாடுபடுத்தும் இந்த அரச நிறுவனங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த விகாரை அகற்றப்பட்டு காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதுதான் இந்த மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது.

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும் : சிறீதரன் கோரிக்கை | Jaffna Thaiyitti Issue

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் ஆறாவது நாள் நிறைவு: இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு(படங்கள்)

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் ஆறாவது நாள் நிறைவு: இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு(படங்கள்)

அவர்களுக்கு விகாரைக்கு என்று சொந்தமாக காணியிருந்தால் அதில் அவர்கள் அமைத்துக் கொள்ளலாம் அல்லது இருந்தால் அதைப் பற்றி பரிசீலிக்கலாம்.

ஆனால் அரசாங்கத்தினுடைய இந்த வலுக்கட்டாயமான மக்களை ஏமாற்றுவதற்கான இந்த நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்.

மறைமுகமான உண்மை

மிக முக்கியமாக வெளியிலே ஒரு பகட்டாக காட்டப்படுகின்ற ஒரு அமைச்சர் வந்து அளவீடு செய்வதற்கு தயார் நிலை காட்டுவது போல காட்டிக் கொள்ளுகிறார், ஆனால் அதற்குப் பின்னாலே ஒரு செய்தி இந்த காணிகளை அளவீடு செய்து அரசாங்கத்துக்கு எடுக்கக்கூடிய காணிகளை எடுக்கப் போகின்றார்கள் என்பது தான் மறைமுகமான உண்மையாகும்.

எங்களுடைய மக்கள் ஏமாற்றப்படுவதற்கான சூழல் இருக்கின்றது நாங்கள் எல்லோரும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் இந்த விடயத்தில் சேர்ந்திருந்தால் தான் எங்களுக்கு எதிராக நடக்கின்ற இந்த சதி பின்னல்களுக்கு எதிராக நாங்கள் ஒரு அணியாக இந்த விடயத்தை கையாள முடியும்.

ஆகவே இதனை முழுமையாக எதிர்க்க வேண்டிய தேவையில் நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்.

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும் : சிறீதரன் கோரிக்கை | Jaffna Thaiyitti Issue

சாலை முகாமையாளர் மீது நடத்துனர் தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்

சாலை முகாமையாளர் மீது நடத்துனர் தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்

பௌத்த பேரினவாதம்

இதனை தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சொன்னது போல, இது ஏற்கனவே “பிரதேசம் மட்டும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்”, மற்றும் “மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ”இது கட்டக்கூடாது என எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, இப்போது திரும்பவும் அந்த குழு இந்த குழு போடுவது என்று சொல்லி அதிபரால் ஏமாற்றப்படுகின்ற இந்த வித்தைகளுக்கு நாங்கள் ஒரு புரிதலை வைத்துக் கொண்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சரியான முறையில் நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்வதோடு, தொடர்ந்து நாங்கள் எல்லோரும் அவதானித்து கண்காணிப்போடு இருக்கின்ற பொழுது தான் எங்கள் மக்களுடைய நிலத்தை நாங்கள் சரியான முறையில் காப்பாற்ற முடியும்.

இந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் சரியான முறையில் செயல்பட தவறினால் இன்னும் இன்னும் இந்த நடவடிக்கைகள் தொடரும் ஆகவே அதற்காக எல்லோரும் ஒன்றிணைவோம்” என தெரிவித்துள்ளார். 

பிள்ளையானால் 'முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது' : எச்.எம்.எம்.ஹரீஸ்

பிள்ளையானால் 'முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது' : எச்.எம்.எம்.ஹரீஸ்

 

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை

29 Nov, 2022
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Krefeld, Germany

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025