யாழில் சீற்றம் கொண்ட கடல்: வடக்கு மாகாணத்தில் நாளை காலை வரை மழை தொடரும் என அறிவிப்பு!
Jaffna
Sri Lanka
Weather
By Theepan
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு
இதேவேளை, வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளதால் கரையோர கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

மறுஅறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி