பிரான்ஸ் இளைஞனுடன் திருமணம் - போலி விசா மூலம் போலந்து செல்ல முயற்சி - யாழ் யுவதி கைது!
போலி விசாவுடன் பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி போலந்து வீசாவுடன் தோஹா கட்டார் ஊடாக போலந்து செல்ல முயன்றவர்களே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளனர்.
போலி விசா மூலம் பிரான்ஸ்

ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நபர்கள் இவர்களிடம் பணத்தை பெற்று சட்டரீதியில் வேலை விசா மூலம் போலந்துக்கு அனுப்புவதாகக் கூறி தங்களை ஏமாற்றி உள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் ராஜகிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 21 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் யுவதி

கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரான்ஸ் இல் உள்ள இளைஞன் ஒருவரை திருமணம் செய்வதற்காக குறித்த விசா மூலம் பிரான்ஸ் செல்லவிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரான்ஸ் இளைஞனும் விசா இல்லாமல் பிரான்ஸ் இல் வசிப்பதாக யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.