குப்பைத் தொட்டி இல்லாத நாடு எது தெரியுமா?
உலகில் பல நாடுகளில் குப்பைத் தொட்டி என்பது மிக முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.
சுகாதாரத்தை முறையாக பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் குப்பை தொட்டியை பொது இடங்களில் வைக்க தடை விதித்த நாடு பற்றி தெரியுமா?
உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட ஜப்பான் நாட்டிலேயே இந்த விதி பின்பற்றப்படுகின்றது.
மெட்ரோ வாயு தாக்குதல்
ஒரு சர்வதேச ஊடக அறிக்கையின்படி, ஜப்பானில் பொது குப்பைத்தொட்டிகள் இல்லாததற்கு மிகப்பெரிய காரணம் டோக்கியோ மெட்ரோ வாயு தாக்குதல் என கூறப்படுகின்றது.
கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி இந்த தாக்குதல் ஓம் ஷின்ரிக்கியோ எனப்படும் மத வழிபாட்டு முறையை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளில் விஷம் கலந்த சாரின் வாயுவை நிரப்பி மெட்ரோ தொடருந்தில் வீசி சென்றதில் 12 பேர் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஜப்பானுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது.
குப்பைத் தொட்டிகளை அகற்றும் முடிவு
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஜப்பான் பொது குப்பைத் தொட்டிகளை அகற்ற முடிவு செய்தது.
அந்த வகையில், 1995 க்குப் பிறகு ஜப்பானில் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
பல நாடுகளில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக குப்பைத் தொட்டிகள் அகற்றப்படுகின்றன, ஆனால் அவை பின்னர் கொண்டு வரப்படுகின்றன.
இருப்பினும், இந்த விஷயத்தில் ஜப்பான் வேறுபட்டது. கடந்த 30 ஆண்டுகளாக பொது இடங்களில் குப்பை தொட்டிகள் இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது.
ஜப்பான் மக்கள்
சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் தென்பட்டாலும், உங்கள் குப்பைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று பணிவான வேண்டுகோள் எழுதப்பட்டுள்ளது.
ஜப்பான் மக்கள் தங்கள் பைகளில் குப்பைகளை வைத்துக்கொண்டு சரியான இடத்திற்கு சென்று வீசுகின்றனர்.
குப்பைத் தொட்டிகள் இல்லாத போதிலும், எந்தவொரு நாடும் ஒழுக்கம் மற்றும் தூய்மைப் பழக்கவழக்கங்களுடன் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என்பதை ஜப்பான் நிரூபித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்