தாய்மையை இழிவுபடுத்தும் பேச்சு - பகிரங்க மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்
srilanka
jeevan thondaman
By Vasanth
தாய்மையை இழிவுபடுத்தும் வகையில் தான் கருத்து வெளியிட்டமைக்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் ஊடாகவே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இனிவரும் காலங்களில் தனது வார்த்தைப் பிரயோகங்களை கட்டுப்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொகவந்தலாவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தாய்மையை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்