யாழில் இடம்பெற்ற படுகொலை நினைவேந்தல்! ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று காலை நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தைகளுக்கு உணர்வுரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிபரின் செயற்பாடு
செல்வி தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவச் செல்வங்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர் குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றபோது, வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை என அதிபர் காரணம் காட்டி ஊடகவியலாளர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
அனுமதி மறுப்பு
இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையிலும் நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிபரின் உறவினரான வல்வெட்டித்துறையை சேர்ந்த யூரியூப்பர் ஒருவர் நினைவேந்தல் நிகழ்வுகளை காணொளி பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதாக ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
