சாதாரண தர பரீட்சையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த மாணவர்களுக்கு நீதி
இந்த வருடம் சாதாரண பரீட்சையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த மாணவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சாதாரண பரீட்சையின் முறைக்கேடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சாதாரண பரீட்சையின் முறைகேடுகள் குறித்து கடந்த சில நாட்களாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.
விசாரணை
மேலும், இந்த முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சுமார் 03 மணித்தியாலங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட பரீட்சை மண்டபங்களில் கடமையாற்றிய அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த ரீட்சை ஆணையாளர் நாயகம், மினுவாங்கொடையில் பரீட்சைக்கு தோற்றிய 14 பிள்ளைகளுக்கு புவியியல் வினாத்தாளின் சில பகுதிகளை உரிய அதிகாரிகள் வழங்காதது 100% தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்: புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் ஆதங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |