அநுரகுமாரவின் இந்திய விஜயம்: விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்தியாவுக்கான பயணம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மாற்றும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதா என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பல கருத்துக்களை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம்(05) இந்தியாவை சென்றடைந்திருந்தார்.
பேச்சுவார்த்தைகள்
இதனை தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை சந்தித்து அவர் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், இலங்கைக்கான இந்தியா மற்றும் பல சர்வதேச நாடுகளின் முதலீடுகள் கிடைக்கப் பெறும் நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி தடை செய்திருந்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவு
எனினும், தற்போது மக்கள் விடுதலை முன்னணி வித்தியாசமான நோக்கத்துடன் செயல்படுவதாகவும், இந்தியாவுடனான உறவை கட்டியெழுப்ப முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கான பயணத்தை தொடர்ந்து, இலங்கையில் இந்தியர்கள் முதலீடு செய்யும் நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கும் என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |