கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது!
பாதாள உலகத்தின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ரத்மலானே சைமா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூன்று பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர், இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிவப்பு அறிவிப்பு
இதேவேளை, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரானை இன்டர்போல் உதவியுடன் நாடுகடத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இவர் சர்வதேச பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த நாட்டில் ஏராளமான பாதாள உலகச் செயல்பாடுகளை நடத்தியதோடு, பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களைக் குற்றப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் மூலம் ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து, தனது குற்றச் செயல்களைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |