சுகாதார அமைச்சருக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம்
சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி பல சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று(13) சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இப்போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மக்களிடம் கையளித்துள்ளார்.
வாக்குவாதம்
மேலும், மதிய உணவு, குடை, நாற்காலியுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர் அனுமதிக்காததால், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
