யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரளக் கஞ்சா
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கஞ்சாப் பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.
இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போதைத்தடுப்பு காவல்துறை , உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரியூட்டப்பட்டுள்ளன.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்