கிளிநொச்சி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் யாழ் உறவுகளும்!
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த பிள்ளைகளையும் சரணடைந்த பிள்ளைகளையும் தரும்படி கோரி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை நேற்றைய தினம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பித்தனர்.
சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 6ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரும் இணைந்து கொண்டனர்.
போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 12 வருடங்கள் கடந்தும் எமது பிள்ளைகளை நாம் தேடிக் கொண்டு இருக்கின்றோம்.
அத்துடன் இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும் இராணுவத்திடம் சரணடைந்த பிள்ளைகளையும் எம்மிடம் ஒப்படைக்கும் வரையும் , இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும் வரையும் நாம் போராடிக்கொண்டு இருப்போம் என தெரிவித்தார்