கொழும்பில் 3 மாடி கட்டடத்தில் தீ பரவல்: ஏராளமான சொத்துக்கள் நாசம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
Fire
By Shadhu Shanker
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ பரவலானது, நேற்று (12) நள்ளிரவு வேளையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த இருவர் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.
சொத்துக்கள் நாசம்
சம்பவ இடத்திற்கு விரைந்த 8 தீயணைப்புப் படையினர் தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் தீ பரவலினால் ஏராளமான சொத்துக்கள் நாசமடைந்துள்ளதாகவும் மின்கசிவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி