கொத்தலாவல பல்கலை சட்டமூலம் - பின்வாங்கியது கோட்டாபய அரசு
parliament
kothalawala university
samal rajapaksha
By Sumithiran
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்ற அமர்வு அரம்பமான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த வாரம் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும் பின்னர் அது சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி