யாழில் மேலும் பல புதைகுழிகள்! சோமரத்னவை நேரில் அழைத்து வருமாறு சுரேஷ் கோரிக்கை
கிருஷாந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று (19) செம்மணி மனித புதைகுழியை பார்வையிடச் சென்றிருந்தமை குறித்து இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிபிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிருஷாந்தி கொலை வழக்கில் சோமரத்தன ராஜபக்ச என்பவர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். அவர் செம்மணி உள்ளிட்ட இடங்களின் பல பகுதியிகளில் பல உடலங்களை தாம் புதைத்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
கடிதத்தின் வாயிலாக அறிவிப்பு
அதனை அடையாளம் காட்ட தயாராகவுள்ளதாகவும் அவர் தன்னுடைய மனைவி ஊடாக கடிதத்தின் வாயிலாகவும் பல பொது வெளிகளிலும் கூறி இருக்கின்றார். அவருக்கு மரண தண்டனை விதித்த போதும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

சந்திரிக்கா பண்டார நாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தெந்த பகுதிகளில் புதைகுழிகள் இருந்தன என்பதை அடையாளம் காண அவர் முற்படவில்லை.
இந்நிலையில் சோமரத்ன என்பர் இன்னமும் கூட தான் இடங்களை அடையாளம் காட்ட தயாராகவுள்ளதாக தற்போதும் கூறிக்கொண்டுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு அவரைச் சந்தித்திருக்கின்றது. ஆணைக்குழுவுக்கும் அவர் பல கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அவர் கூறிய கருத்துக்களை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடவில்லை. ஆனாலும் கூட செம்மணிப் பிரதேசத்தில் தாங்கள் வெறுமனே ஒரு கருவிகள் மாத்திரம் தான்.
ஆனால் மேல்மட்டத்தில் இருக்கும் பலர் பல நூறு சடலங்களைக் கொண்டு வந்து அங்கே புதைக்குமாறு சொல்லுவதான கூறியுள்ளார்.

இத்தகைய பின்னணியில் செம்மணி மயானத்திற்குள் புதைக்கப்பட்ட சடலங்கள் மாத்திரமல்லாமல் இன்னும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம்.
ஆகவே இந்த அரசாங்கம் சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணம் வரவழைத்து புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |