குருக்கள்மடம் படுகொலைகளுக்கு பின் ஒளிந்திருக்கும் மர்மம்: வெளிவரும் உண்மைகள்
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர், கல்முனை வழியாகக் காத்தான்குடிக்குப் பயணம் செய்த முஸ்லிம் மக்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தமது உறவுகளைப் பறிகொடுத்த குடும்பங்கள், பல தசாப்தங்களாக ஆறாத வடுவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும் காத்திருக்கின்றனர்.
இழந்த உயிர்களுக்குரிய நீதியும் உண்மையும் வெளிப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி. பிரதீபன் முன்னிலையில் 2026 மார்ச் மாத இறுதியில் இந்த மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகளின் அடுத்த கட்டம் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் தஜீபரன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |