லலித் - குகன் வழக்கு - யாழ் வர அச்சம்: கோட்டாபயவுக்கு நீதிமன்றம் உத்தரவு
2011 ஆம் ஆண்டில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னாள் ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்சவிடம் சாட்சியவிடம் சாட்சியம் பெரும் வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிவான் செ.லெனனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
நேற்று இரண்டாவது தடவையாகவும் கோட்டாபய ராஜபக்ச இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் நிகழ்நிலையில் சாட்சியமளித்தார்.
கடத்தல்கள் மற்றும் தாக்குதல்
இந்த வழக்குக்கு உட்பட்ட பல்வேறு நபர்களின் காணமல் போதல்கள் தாக்குதல்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் கேள்விகள் எழுப்பப்ட்டுள்ளன.
அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அவருக்கு இருந்த தொடர்பு மற்றும் அது தொடரபாக இருந்த அறிவு ஆகியவை குறித்து வழக்கில் கேள்வி எழுப்பபட்டது.

இது குறித்து பதில் வழங்கிய அவர், மேற்படி விடயங்கள் தொடர்பாக குறித்த காலப்பகுதியில் நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் நினைவு இல்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கோட்டபாயவிடம் விசாரணை
இந்நிலையில் நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்ட சில ஆவணங்கள் தொடர்பாகவும் கோட்டாபயவிடயம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சாட்சியாளரால் அடையாளம் காண முடியாத சில ஆவணங்களுக்கு, சாட்சியாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்தார்.
அதற்கமைய, சாட்சியப் பதிவை நீதிமன்றம் 2027 பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.
அதன்படி, இந்தச் சாட்சியாளரான கோட்டாபய மீண்டும் பெப்ரவரி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் நிகழ்நிலையில் சாட்சியம் வழங்க உத்தரவிடப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |