லங்கா பிரீமியர் லீக்: ஆட்ட நிர்ணய விவகாரத்தில் ஒருவர் கைது
Cricket
Sri Lanka Cricket
Bangladesh
By Shadhu Shanker
லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற பங்களாதேஷ்(Bangladesh) பிரஜையான இவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(22) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு அமைச்சில் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய சம்பவம்
கைது செய்யப்பட்ட LPL அணியின் உரிமையாளர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் நேற்றைய தினம்(21) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி