இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்!

Tamils Rajiv Gandhi Sri Lanka India Indian Peace Keeping Force
By Niraj David Nov 30, 2023 03:48 AM GMT
Report

இந்திய விமானப் படை ஹெலிக்காப்டரில் 24.07.1987 அன்று புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் கறுப்புப் பூனை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள்.

புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த அஷோக்கா ஹோட்டல் சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

சிறைவைப்புச் சம்பவம்

இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடமுடியும்.

இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்! | Ltte Tigers In Jail Ltte Leader Rajiv Gandhi India

இந்தியாவின் நம்பிக்கைத் துரோகம் புலிகளின் தலைவர் பிரபாகரன்  அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், எந்த ஈழத் தமிழனும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டான் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தியது.

24ம் திகதி முதல் ‘அஷோகா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.

இந்த நான்கு நாட்கள் இடைவெளியை, அவர் மற்றய இயக்கங்களைச் சமாளிப்பதற்கும், ஒப்பந்தத்திற்கான அவற்றின் ஒப்புதல்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார்.

புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள் என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.

இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்! | Ltte Tigers In Jail Ltte Leader Rajiv Gandhi India

சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களை பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.

புதுடில்லியிலுள்ள அஷோக்கா ஹோட்டலில் புலிகளின் தலைவர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றி சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமே உடனே எதுவும் வெளியே தெரிவிக்கவில்லை.

வேறு வேறு மனநிலையில் இருந்த இந்த இரண்டு தரப்பினரும் தங்களுக்கிடையில் நடைபெற்ற அந்த சம்பாஷணைகளின் விபரங்களை வெளியிட விரும்பவும் இல்லை.

ஆனால், அன்றைய தினம் ‘அஷோக்கா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகள் படிப்படியாக இந்திய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்தியாவின் துரோகம்

வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா எப்படியான அழுத்தங்களையெல்லாம் பிரயோகித்திருந்தது என்ற விபரங்கள் வெளியாகி, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் துரோகத்தை இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, முழு உலகிற்குமே வெளிப்படுத்தியிருந்தது.

ஜூலை மாதம் 28ம் திகதி இரவு அஷோக்கா ஹோட்டலில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.

தமிழ் நாடு அமைச்சர் பண்டிருட்டி ராமச்சந்திரன் மற்றும், இந்திய மத்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் போன்றோரும் இந்தியப் பிரதமருடன் அங்கு சென்றிருந்தார்கள்.

இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்! | Ltte Tigers In Jail Ltte Leader Rajiv Gandhi India

சிங்கள அரசுகளை நம்பி பல தடவைகள் நாம் ஏமாந்துவிட்டோம். தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்று பிரபாகரன் ராஜீவ் காந்தியிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். சிறிலங்கா அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்துகொள்ளாமல் இந்தியா பார்த்துக்கொள்ளும் என்று கூறி பிரபாகரனின் மனதை மாற்றுவதற்கு ராஜீவ் காந்தி முயன்றார்.

ஆனாலும் பிரபாகரன் தனது பிடியை விட்டுக்கொடுக்க தயாரில்லாதவராகவே நிலைப்பாடு எடுத்தார். ராஜீவ் காந்தியின் எந்தவொரு நெருக்குதலுக்கும் மசியாதவராகவே பிரபாகரன் காணப்பட்டார்.

இதனால் மிகவும் கோபமடைந்த ராஜீவ்காந்தி, “உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது” என்று மிரட்டியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி  புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் முன்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீட்ஷித் பிரபாகரனைச் சந்தித்திருந்தர்.

புதுடில்லி அஷோக்கா ஹோட்டலில் கறுப்புப் பூனைகளின் பாதுகாப்பில் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவரைச் சந்தித்த தீட்ஷித், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விபரங்களை விளக்கி, புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார்.

கவனமாகச் செவிமடுத்த புலிகளின் தலைவர் பிரபாகரன், ஒப்பந்தத்தில் உள்ள பல விடயங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்! | Ltte Tigers In Jail Ltte Leader Rajiv Gandhi India

குறிப்பாக, புலிகளின் ஆயுத ஒப்படைப்பு, மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு சம்பந்தமாக சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரேயடியாக மறுத்திருந்தார்.

‘இது மிகவும் குழப்பம் அளிக்கும் ஒப்பந்தம், “எமக்கு ஏமாற்றத்தைத் தரும்படியான ஒப்பந்தம் என்று அவர் தெரிவித்தார்.

இதனால் மிகவும் கோபமுற்ற தீட்ஷித், “நீங்கள் நான்கு தடவைகள் எங்களை முட்டாளாக்கி ஏமாற்றியுள்ளீர்கள் என்று தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த புலிகளின் தலைவர், “அப்படியானால், நான்கு தடவைகள் நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்றி இருக்கின்றோம் என்று அர்த்தம் என்று தெரிவித்தார்.

வைக்கோவின் கவலை

இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள் என்று அழைக்கப்பட்டவரும், தற்போதய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபால்சாமி(வைக்கோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.

அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன்  மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், பிரபாகரன் வை.கோபால்சாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.

இந்தியாவிற்கு எதிராக புலிகள் திரும்பியதற்கான காரணம்! | Ltte Tigers In Jail Ltte Leader Rajiv Gandhi India

அப்போது பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபால்சாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார், “அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது.

பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டு விட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது.

என்னிடம் சயநைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்று கூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின் நாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.

இந்தியத் தலைவருக்கு எதிரான ‘துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அத்தியாயம் 1

மோசமான வரலாற்று முடிவை எடுத்த இந்தியா! தலைவர் பிரபாகரனைப் பிடிக்க விரைந்த இராணுவம்

மோசமான வரலாற்று முடிவை எடுத்த இந்தியா! தலைவர் பிரபாகரனைப் பிடிக்க விரைந்த இராணுவம்

அத்தியாயம் 2

இந்தியாவிற்கு பிடி கொடுக்காத தலைவர் பிரபாகரன்! முதல் முதலாக செய்த சாத்விகப் போராட்டம்

இந்தியாவிற்கு பிடி கொடுக்காத தலைவர் பிரபாகரன்! முதல் முதலாக செய்த சாத்விகப் போராட்டம்

அத்தியாயம் 3

தலைவர் பிரபாகரனுக்கு எதிராக இந்தியா தீட்டிய சதித்திட்டம்! விரோதத்திற்கு வித்திட்ட பயணம்

தலைவர் பிரபாகரனுக்கு எதிராக இந்தியா தீட்டிய சதித்திட்டம்! விரோதத்திற்கு வித்திட்ட பயணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019