எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் வழியில் இராணுவம் கெடுபிடி (படங்கள்)
இரண்டாம் இணைப்பு
வடமராட்சி உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்திற்கு செல்லும் வழியில் இராணுவம் தடைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அச்சுத்தல் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


முதலாம் இணைப்பு
வடமராட்சி உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் மாவீரர் நாளான இன்று மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினா் சோதனை நடவடிக்கை

மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் “551ஆவது படைப்பிாிவு” முகாம் அமைத்து தங்கியுள்ள நிலையில்ஈ துயிலும் இல்லத்திற்கு வெளியே ஈகைச் சுடரேற்றி மாவீரா்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டிருக்கின்றது.
இதன்போது குறித்த பகுதியில் வீதியின் இரு பக்கங்களிலும் வீதி மறிப்புக்கள் போடப்பட்டு இராணுவத்தினா் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
