வழமைக்கு மாறாக நாடாளுமன்றம் விரைந்த சட்டமா அதிபர் -மகிந்தவுடன் நீண்டநேரம் பேச்சு
srilanka
parliament
mahinda yapa abeywardena
By Vasanth
நாட்டின் சட்டமா அதிபர் சாதாரண விடயத்துக்காக நாடாளுமன்றம் செல்வதில்லை. ஏதாவது முக்கியமான விடயத்துக்காகவே அவர் அங்கு செல்வது வழமை. இந்த நிலையில் நேற்றையதினம் நாடாளுமன்றம் சென்ற சட்டமா அதிபர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்துள்ளார்.
மிக நீண்டநேரமாக இவ்விருவருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் சட்டமா அதிபர் லிவேரா நேற்று சபாநாயகரை சந்தித்திருப்பதன் பின்னணியில் முக்கியமான சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.