யாழில் பௌர்ணமி தினத்தன்று மதுபான விற்பனை: ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பௌர்ணமி தினமான நேற்றைய தினம் (24-11-2026) மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதுபானவிற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது விற்பனை நோக்குடன் பதுக்கி வைத்திருந்த 50 மதுபான போத்தல்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த நபரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி