யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Kajinthan Jul 10, 2026 11:13 AM GMT
Report

யாழில் வாசனை சவற்காரத்திற்குள் வைத்து நூதனமான முறையில் போதைப் பொருள் கடத்திய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகர்புறப் பகுதியில் போதைப்பொருளை விற்பனைக்காக கொண்டு சென்றவேளை உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று (9) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்

பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்

 நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

அதன் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் காவல்துறை புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

காவல்துறையினரின் சோதனையின் பொது வெளியிடம் ஒன்றிலிருந்து பொதிகள் அனுப்பும் சேவை மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது! | Man Arrested In Jaffna For Smuggling Heroin

கைதுசெய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.

கைதான நபரரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ் காவல்துறை பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார். 

தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி! மீண்டும் சந்தேகநபரானார் துமிந்த

தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி! மீண்டும் சந்தேகநபரானார் துமிந்த

நீர்கொழும்பு சிறைக் கலவரம் : நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நீர்கொழும்பு சிறைக் கலவரம் : நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026