அர்ச்சுனா எம்.பியின் தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் தாக்குதலுக்குள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் (25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் முரண்பாடு ஏற்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறித்த நபரை காலால் உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் (27) இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 12 மணி நேரம் முன்